கமல் – லோகேஷ் கனகராஜ் படத்தின் Title Teaser – பயங்கர குஷியில் கமல் ரசிகர்கள் !

7 November 2020, 5:28 pm
Quick Share

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுதியுடன் நடிப்பில் படு மாஸாக, மிக சிறப்பாக, வெறித்தனமாக உருவாகியுள்ளது “மாஸ்டர்”.

இந்த படத்தின் டீஸர் எப்போது வெளியாகவுள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இது இல்லாமல் வாத்தி கம்மிங் ஒத்து, குட்டி ஸ்டோரி பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஆரவாரமான வரவேற்பை பெற்று வருகின்றது. இவர் கமலை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்று அறிவிப்பு வந்தவுடன் இணைய தளமே அதிர்ந்தது.

அந்த படத்தை பற்றிய எந்த Update வந்தாலும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பெரிதளவில் கொண்டாடி வருகிறார்கள். இன்று கமல் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தின் Title Teaser வெளிவந்துள்ளது.

Teaser-இல் ஒரு தனி வீட்டில் இருக்கும் கமல்ஹாசன், கேங்ஸ்டர்ஸ் மற்றும் போலீஸ்காரர்களை அழைத்து விருந்து வைக்கிறார். இவர்கள் வருவதற்கு முன்பு பல்வேறு ஆயுதங்களை ஆங்காங்கே மறைத்து வைக்கிறார்.

கடைசியாக இரு கோடரிகளை கைப்பற்றி ஆரம்பிக்கலாமா என்று அவருக்கே உரிய பாணியில் டீசரை முடிக்கிறார். படத்திற்கு பெயர் விக்ரம் என்று வைத்துள்ளார்கள். இது ஏற்கனவே 1986-ல் கமல்ஹாசன் நடித்து வெளியான திரைபடத்தின் பெயராகும்.

இதுல கூடுதலான தகவல் என்னவென்றால் லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். ஆக, ஒரு வேட்டையாடு விளையாடு படம் போல் ஒரு சம்பவத்தை எதிர்நோக்கி காத்திருப்போம்.

Views: - 23

0

0