வீர தீர சூரன் தேதி குறிச்சாச்சு..மீண்டு வருவாரா விக்ரம்..!

Author: Selvan
29 November 2024, 9:58 pm

சியான் விக்ரமின் மாஸ் கம்பேக்

சினிமாவுக்காக தன்னுடைய உடலை செதுக்கி புது புது கெட்டப் போட்டு தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் நடிகர் சியான் விக்ரம்.இவர் எவ்ளோ கடின உழைப்பை போட்டு நடித்தாலும் சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.

விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தங்கலான்,இப்படத்தில் விக்ரம் தன்னுடைய அசுர நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் படம் தோல்வியை தழுவியது.

தற்போது தன்னுடைய 62 வது படமான வீர தீர சூர இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார்.இதனை அருண்குமார் இயக்கியுள்ளார்.

இதையும் படியுங்க: லப்பர் பந்து நடிகைக்கு அடித்த ஜாக்பாட்..தட்டி தூக்கிய ஆர்.ஜே.பாலாஜி..!

இப்படத்தில் விக்ரமுடன் எஸ் ஜே சூர்யா,துஷார விஜயன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.மதுரை மண்ணை மையமாக எடுக்கப்பட்ட இப்படத்தின் பர்ஸ்டலூக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Chiyaan Vikram comeback movie

தற்போது இந்தப்படத்தை ஜனவரி 10 ஆம் தேதி வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர்.இப்படத்தியின் திரையரங்கு உரிமையை 21 கோடிக்கு FIVE STAR நிறுவனத்தின் தலைவர் செந்தில் வாங்கியிருக்கிறார்.

சியான் விக்ரம் இந்த படத்தின் மூலம் COME BACK கொடுப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

  • Aadujeevitham Oscar selection மூன்றாவது முறை ஆஸ்காரை குறிவைக்கும் ஏ.ஆர்.ரகுமான்…எந்த படத்திற்கு தெரியுமா ..!
  • Views: - 66

    1

    0

    Leave a Reply