டிக்டாக் செயலியின் மூலம் பல ரீல்ஸ் செய்து தமிழக இணையவாசிகளின் மத்தியில் மிகப் பிரபலமாக ஆனவர் ஜிபி முத்து. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், டிக்டாக் செயலியின் மூலம் மிகப் பிரபலமானதை தொடர்ந்து இவருக்கு தொலைக்காட்சிகளில் தோன்றும் வாய்ப்புகளும் அதிகம் வந்தது. குறிப்பாக “பிக்பாஸ்”, “குக் வித் கோமாளி” போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் இவருக்கு மிக நல்ல பெயர் உண்டு.
ஜிபி முத்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி என்ற ஊரில் பெருமாள்புரம் என்ற பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் பெருமாள்புரத்தில் கீழத்தெரு என்று ஒரு தெரு இருந்தது எனவும் அரசுக்கு சொந்தமான அந்த இடத்தை ஆக்கிரமித்து தற்போது கோவில் கட்டி வருவதாகவும் தகுந்த ஆவணங்களுடன் வந்து முறையிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று ஊர் மக்கள் பலரும் ஜிபி முத்து பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி கோவில் கட்டுவதற்கு இடையூறாக இருக்கிறார் என கூறி அவரை எதிர்த்து அவரது வீட்டை முற்றுகை இட முடிவெடுத்தனர். இந்த தகவல் அறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த சமயத்தில் ஜிபி முத்துவும் சம்பவ இடத்திற்கு வர ஊர் மக்களுக்கும் ஜிபி முத்துவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
அதனை தொடர்ந்து ஜிபி முத்து ஒழிக என ஊர் மக்கள் கோஷம் எழுப்பத் தொடங்கினர். ஜிபி முத்து கோவிலுக்குச் சொந்தமான இடத்தை சொந்தமாக கேட்டதாகவும் அதை அவருக்கு வழங்காத நிலையில்தான் இவ்வாறு பொய் குற்றச்சாட்டை பரப்புகிறார் எனவும் ஊர் மக்கள் கூறுகின்றனராம்.
தேனி நகரில் வசித்து வருபவர் 28 வயதான இளைஞர். இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2023 ஆம்…
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சில இளைஞர்கள் மத்தியில் போதை தரும் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதையும் படியுங்க:…
சிம்பு-ஐசரி கணேஷ் விவகாரம் ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனத்திற்கு சிம்பு நடித்துக்கொடுத்த திரைப்படம்தான் “வெந்து தணிந்தது காடு”. சிம்பு ஐசரி…
தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் லீக் தலைவர் முன்னாள் கர்னல் சிடி அரசு மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,…
புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களில் கலந்து கொள்ள வந்த தேமுதிக கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் செய்தியாளரிடம்…
பொள்ளாச்சி வழக்கில் தண்டனை கிடைத்ததற்கு நான் தான் காரணம் என இபிஎஸ் பொய் சொல்லி வருவதாக உதகையில் முதலமைச்சர் ஸ்டாலின்…
This website uses cookies.