மலையாள சினிமா உலகில் முன்னணி நடிராக வலம் வருபவர் விநாயகன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்” திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில் இவர் தற்போது கேரளா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவின் கொல்லம் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் விநாயகன் குடி போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அது மட்டுமல்லாது அங்கு தங்கியிருந்த ஒரு வெளிநாட்டு பயணியிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்புகாரை தொடர்ந்து கொல்லம் போலீஸார் அவரை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று அதன் பின் கொல்லத்தில் உள்ள அஞ்சலமூடு காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து வந்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த பிறகும் கூட அவர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விநாயகன் இதற்கு முன்பே குடிபோதையில் பொது இடத்தில் ரகளை செய்ததற்காக அவரை போலீஸார் கைது செய்த சம்பவமும் நடந்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹைதராபாத் விமான நிலையத்தில் மது போதையில் விமான நிலைய அதிகாரி ஒருவருடன் வாக்குவாதம் செய்ததால் போலீஸாரால் கைது செய்யப்பட்டு அதன் பின் ஜாமீனில் வெளிவந்தார்.
கள்ளத்தொடர்பால் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம்…
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (40).இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.…
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் “இராமாயணா”. இத்திரைப்படம் இரண்டு…
திருப்புவனத்தில் பலியான அஜித்குமாரின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக முன்னேற்றகழக தலைவர் ஜான் பாண்டியன் பின்னர் செய்தியாளர்களை…
This website uses cookies.