பொதுவாக தமிழ் சினிமாவில் காமெடியை மையப்படுத்தி திரைப்படங்கள் வருவது தற்போது குறைந்து வருகிறது என்று சொல்லலாம். முன்னதாக படங்களில் ஆங்காங்கே காமெடி காட்சிகள் இருந்தது கூட தற்போது அந்த அளவிற்கு இருப்பது இல்லை.
மொத்தமாக காமெடியை மையப்படுத்தி படங்களை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில், காமெடியை மையப்படுத்தி கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கலகலப்பு சுந்தர் சி இயக்கத்தில் சந்தானம், விமல், சிவா, அஞ்சலி, ஓவியா என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். அதனை தொடர்ந்து, மசாலா காபி ஹோட்டலை மையப்படுத்தி ஒரு சூப்பரான காமெடி கதையை கொடுத்ததன் மூலம் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி கலகலப்பு 2 என்ற படத்தை இயக்கினார்.
இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியில் ஆகியிருந்தது. ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, கலகலப்பு 3 பாகம் குறித்து தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அரண்மனை 4 படத்தை முடித்த பிறகு கலகலப்பு 3 பற்றி சுந்தர் சி ப்ளான் செய்து உள்ளாராம்.
கவினை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பிளான் போட்டுள்ளாராம். மேலும், மிர்ச்சி சிவா, ஓவியா, ஜெய் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
This website uses cookies.