தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். திரைப்பட தயாரிப்பாளரும் கூட… தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார். ஆக்ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார்.
அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்த விஷால் பின்னர் அவர் ஒரு நடிகரானார். செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்தார். படமும் வெற்றி பெற்றது. பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த தொடர்ச்சியான படங்களைத் தொடர்ந்து, விஷால் தனது சொந்த தயாரிப்பு ஸ்டுடியோவை உருவாக்கினார்.
பின்னர், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் பூஜை போன்ற லாபகரமான முயற்சிகளைத் தயாரித்து வேலை செய்துள்ளார். விஷால், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அக்டோபர் 2015 இல், முந்தைய கமிட்டிக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்ச்சைகளில் சிக்கிய விஷால் மீது பல விமர்சனங்களும் எழுந்தன. 45 வயதை எட்டியும், இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் விஷால். பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ரத்தினம் படத்திற்கான பிரஸ் மீட் நிகழ்ச்சி நேற்று நடைபெற்று உள்ளது. இதில், பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த விஷாலிடம் பத்திரிக்கையாளர் கேள்விகளை கேட்க வந்துள்ளார். அப்போது பயில்வான் மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு சின்ன படம் தானே நல்லா ஓடுச்சு என்ற கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார். அதற்கு விஷால் யார் அது ரங்கநாதன் என்று அறிந்ததும் சத்தியமா அவருக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் என்று கண்டிப்போடு தெரிவித்திருக்கிறார்.
மேலும், அவர் கேள்விக்கு பதில் சொல்ல எனக்கு விருப்பமில்லை என்றும், எனக்கு ஏன் விருப்பம் இல்லை என்று அண்ணனுக்கு தெரியும். நான் ஏன் பதில் சொல்ல மாட்டேன் என்றும், ஒரு பொதுச் செயலாளராக தயவுசெய்து சொல்கிறேன், இந்த பிரஸ்மீட் ஆரோக்கியமாக போய்க்கொண்டிருக்கிறது. என்னை பேச விட்டுறாதீங்க, வேண்டாம் சத்தியமா அவருக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதன்பின் பயில்வான் அந்த இடத்தில் இருந்து உடனே எழுந்து கிளம்பி சென்றார்.
விஷால் இப்படி நடந்து கொள்ள காரணமே சில மாதங்களுக்கு முன்பு லட்சுமிமேனன் விஷால் இருவரும் காதலித்து திருமணம் நடைபெறும் நிலையில், அவர்களது திருமணம் திடீரென நின்று விட்டதால், லட்சுமி மேனன் கேரளாவுக்கு சென்று விட்டதாக பயில்வான் கூறியிருந்தார். அதை கண்டித்து விஷால் கோபத்தில் மறைமுகமாக திட்டி இருந்தார். அதனால் தான் விஷால் பயில்வானின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.