ஒரு வாரம் தள்ளிப்போன விஷாலின் சக்ரா!

31 January 2021, 5:24 pm
Quick Share

விஷால் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள சக்ரா படம் வரும் 19 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். கடந்த 2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் ஆக்‌ஷன் படம் வெளியாகியிருந்தது. இந்தப் படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது சக்ரா, துப்பறிவாளன், எனிமி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். எம்.எஸ் ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் படம் சக்ரா. இந்தப் படத்தில் விஷாலுடன் இணைந்து ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், கே.ஆர்.விஜயா, ரவிகாந்த் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்துள்ளது. நாட்டையே அச்சுறுத்திய கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், பொன்மகள் வந்தாள், பென்குயின் ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியானது. திரையரங்குகள் திறக்கப்பட்டதற்கு பின்னர் மாஸ் படமான விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்களை திரையரங்கிற்கு அழைத்து வந்தது. 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி ஹிட் கொடுத்து முதல் பிளாக்பஸ்டர் படமாக மாஸ்டர் அமைந்திருக்கிறது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தைப் போன்று ஒவ்வொரு படமாக திரைக்கு வருகின்றது. அந்த வகையில், தற்போது விஷால் நடித்துள்ள சக்ரா படமும் திரைக்கு வருகிறது. ஏற்கனவே உலகம் முழுவதும் சக்ரா படம் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி திரைக்கு வரும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி சக்ரா படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள சக்ரா படம் வரும் 19 ஆம் தேதி முதல் திரைக்கு வருகிறது.

Views: - 0

0

0