விஸ்வாசம் படத்திற்க்கு தேசிய விருது வாங்கிய டி. இமானுக்கு அஜித் வாழ்த்து !

Author: Udhayakumar Raman
23 March 2021, 6:41 pm
Quick Share

விஸ்வாசம் படம் 2019 – ஆம் ஆண்டு வருட ஆரம்பத்தில் வெளியானது. படம் வெளியானது முதல் பெரிய வரவேற்பு கிடைத்தது. மகள் – தந்தைக்குமான பாசப் போராட்டத்தையும் கலக்கல் வேட்டி சட்டையில் சொல்லியிருக்கிறது, இந்த விஸ்வாசம்’. உங்க ஆசையைத் திணிச்சு உங்க குழந்தையை வளர்க்காதீங்க என்னும் கருத்தைப் பேசுகிறது.

அஜித் – சிவா காம்போவில் இதுவரை வெளியான படங்களில் விஸ்வாசம் மாஸ் வெற்றி. விஸ்வாசம் வந்தாலும் வந்தது சாதனை மேல் சாதனைதான். இப்போதும் இப்படத்தின் TRP, OTT சாதனையை எந்த முன்னணி நடிகர்களின் படங்களால் முறியடிக்கப்படவில்லை. இதுவே அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் தான்.

தற்போது என்ன விவரம் என்றால் இந்த படத்திற்காக நேற்று தேசிய விருது வாங்கினார் D. இமான், இந்த விருதை வாங்கியதற்காக D. இமானுக்கு இசை புயல் ரரஹ்மான் முதல் எல்லோரும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்ல, இந்தநிலையில் தற்போது இவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் அஜித்.

Views: - 204

5

0