உன்ன நெனச்சு பாடலை காதலர் தினத்தன்று ஓட்டித் தள்ளிய நடிகர் விவேக்…! வீடியோ உள்ளே…!

14 February 2020, 1:16 pm
Quick Share

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் “சைக்கோ” இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார். படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள். அதில் அனைவராலும் கவரப்பட்ட பாடல் சித் ஸ்ரீராம் பாடிய “உன்ன நெனச்சு” பாடல்.


காதலர் தினமான இன்று இந்த பாடலை நகைச்சுவை கலைஞர் விவேக் சரமாரியாக ஓட்டித் தள்ளியுள்ளார். இந்த பாடலின் வரிகளான “உன்ன நெனச்சு, நெனச்சு… உருகிப்போனேன் மெழுகா” என்ற பாரிகளை அவருடைய துணை நடிகர் பாடிக்கொண்டே சீரியல் பல்புகள் கிடைக்கும் சாலையில் நடந்து வரும்பொழுது எலக்ட்ரிக் வயரில் காலை விடுகிறார்.


அதற்கு விவேக் “உண்மையிலே பல்பால உருகிடுவ டா… சீக்கிரம் வெளியில வாடா ” என்று அவருடைய ஸ்டைலில் கூறிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.