“இந்த டிரஸ் போட்டு உங்க ஷோவுக்கு நீங்க வந்தீங்கன்னா, TRP வேற லெவலில் ஏறும்” – DD வெளியிட்ட வீடியோ…!

13 August 2020, 12:44 pm
DD - Updatenews360
Quick Share

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

நீண்ட காலமாக தனது திருமணத்தை தள்ளிப்போட்டு வந்த DD, ஒரு வழியாக கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

சமீபத்தில், வெளிநாட்டில் குட்டி ஷார்ட்ஸ் அணிந்து வலம் வருவதைப் போல ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். “இந்த மாதிரி உங்க நிகழ்ச்சிக்கு நீங்க வந்து இருந்தீங்கன்னா, டிஆர்பி இன்னும் ஏறி இருக்கும்” என்று ரசிகர்கள் நக்கல் அடிக்கிறார்கள்.