கியூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சு என மக்களை கவர்ந்த தொகுப்பாளினியாக டிடி என்கிற திவ்யதர்ஷினி இன்றும் ரசிகர்களின் பேவரைட் ஆங்கராக இருந்து வருகிறார். பிரபலங்களை நேர்த்தியாக கையாண்டு அவர்களை பேட்டி எடுத்து தனிப்பட்ட விஷயங்களை லகுவாக பேசி வாங்குவதில் சிறந்த ஆங்கராக டிடி பார்க்கப்படுகிறார்.
இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி தான். இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் இல்லாமல் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. இதனிடையே வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் சின்ன சின்ன ரோல்களில் படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டனர். 2017ல் விவ் கரைத்து பெற்ற டிடி தற்ப்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் டிடி ஒரு பேட்டியில் ஒரு தொகுப்பாளினியாக தான் அவமானப்படுத்தப்பட்டதை குறித்து மிகுந்த வேதனையோடு பேசியுள்ளார். அதாவது, ஒரு முறை காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் ஒரு பிரபல நடிகையை பேட்டி எடுப்பதற்காக நான் தயார் நிலையில் காத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அந்த நடிகை மிகவும் தாமதமாக நிகழ்ச்சிக்கு வந்தார். நான் வழக்கம் போலவே அதை மாற்றி கோபப்படாமல் சிரித்தபடி அவரை நேர்காணல் செய்ய துவங்கினேன்.
ஆனால், அப்போது அந்த பிரபல நடிகை டிடி நீங்க வேற எதாவது காஸ்டியூம் கொண்டுவந்திருக்கீங்களா? தயவு செய்து வேற ஆடை மாத்திக்கிட்டு வறீங்களா? என கேட்டுள்ளார். அதற்கு கரணம் அந்த நடிகை அணிந்திருந்தது போல டிடியும் அழகான உடையணிந்து அந்த ஹீரோயினுக்கு நிகராக தெரிந்தது தானாம். இதனால் டிடி மிகுந்த வருத்தப்பட்டுள்ளார். பின்னர் அவரிடம்… அதற்கு இப்போதைக்கு நேரம் இல்லை… ஏற்கனவே காலதாமதம் ஆகிவிட்டது என கூறி நிகழ்ச்சியை தொடர்ந்துள்ளார். எனவே தொகுப்பாளினிக்கும் சம மரியாதை கொடுங்கள் என டிடி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதையடுத்து யார் அந்த நடிகை? என பலர் தேட துவங்கியுள்ளனர்.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.