“அஜித்துனு பேரு சொல்லி கூப்டாத, தலன்னு கூப்பிடு”- சண்டை போட்ட Big Boss ரியோ ! வைரல் வீடியோ !

Author: Udayachandran
9 October 2020, 2:28 pm
Rio - Updatenews360
Quick Share

அஜித் எந்த வித சினிமா பின்னணியும் இல்லாமல் அதிகம் போராடி சினிமாவில் ஜெயித்துள்ளவர். இன்று அவருக்கென்று மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது. அவரது வெற்றி வெறும் அதிர்ஷ்டத்தால் வந்தது அல்ல ! நேர்மையும் , கடின உழைப்பும், விட முயற்சியும் முக்கிய காரணங்கள்.

இன்று பல கதாநாயகிகளுக்கு கனவாக இருப்பது என்னவென்றால் அஜித் இல்லனா விஜய் படத்துல ஹீரோயினா நடிக்கணும் அப்படி இல்லனா அவங்க கூட ஒரு ஷாட்லையாச்சு நடிக்கணும் என்பதுதான்.

இந்த நிலையில் அஜித்துக்கு திரையுலகிலேயே நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படித்தான் நம்ம விஜய் டிவி புகழ் ரியோவும் அஜித்தின் தீவிர ரசிகர். இவர் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் அஜித்தின் புகைப்படத்தை பார்த்து “இது அஜித்” என்று சொல்லz உடனே ரியோ நடுவில் புகுந்து, “அஜித்துனு பேரு சொல்லி கூப்டாத, தலன்னு கூப்பிடு” என்று அந்த நடிகையிடம் சண்டைக்கு சென்றுவிட்டார். அந்த வீடியோ தற்போது செம்ம வைரலாக பரவி வருகிறது.

Views: - 54

0

0