பைக் ரேஸரான TTF வாசனுக்கு வழக்கு ஒன்றில் 10ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் TTF வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக சுற்றிவருகிறார். அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவுசெய்துவருகிறார்.
இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு வண்டியூர் டோல்கேட் பகுதியில் TN 40 AD 1101 என்ற காரை அஜாக்கிரதையாகவும் கவன குறைவாகவும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போனில் பேசி கொண்டே ஓட்டுவதும் அச்செயலை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவு செய்து Twin Throttlers என்ற ID ல் YOUTUBE சேனலில் பதவிட்டுள்ளதாக மதுரை மாநகர ஆயுதப்படை சார்பு ஆய்வாளரான சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி என்பவர் அளித்த புகாரின் கீழ் அண்ணாநகர் காவல்துறையினர் பைக்ரேஸரான TTF வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இது தொடர்பான விசாரணைக்காக சென்னையிலிருந்து TTF வாசன் கைது செய்யப்பட்டு மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது
மேலும் படிக்க: நான் ஒன்னும் இல்லாமல் வந்தவள் இல்லை.. கடுப்பான ரெடின் கிங்ஸ்லி மனைவி..!
இதனையடுத்து, மரணத்தை விளைவிக்கும் வகையில் பிறருக்கு மரணம் உண்டாகும் என்ற தெளிவுடன் ஒரு வாகனத்தை இயக்கியதாக 308 பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே பைக் ஓட்டுவதற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் போது காரில் பேசியபடி ஆபத்தை விளைவிக்கும் வகையில் காரை இயக்கியதாக TTF வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், வாசனை அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் பின்னர், மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்துவதற்காக அண்ணாநகர் காவல் நிலையத்தில் இருந்து காவல் துறையினர் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் காவலர்களின் கையைவிட சமூக விரோதிகளின் கையே ஓங்கியுள்ளது : இபிஎஸ் கடும் விமர்சனம்!
அப்போது, காவல்நிலையத்தின் முன்பாக பேசிய டிடிஎப் வாசன் : நான் யாருடைய உயிருக்கு பங்கம் விளைவித்தேன், தன் மீது வேண்டுமென்றே பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போதையில் காரை ஒட்டி இரண்டு பேரை கொன்றவர்க்கு பெயில் எனக்கு வழக்கா ? சட்டம் என்பது எல்லோருக்குமானது தான், ஆனால் சாலையில் மதுபோதையில் செல்பவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லை என் மீது மட்டும் போனில் அவுட் ஸ்பீக்கரில் பேசியபோதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது , நான் நீதித்துறையை நம்பியுள்ளேன், எனக்கான நீதி எனக்கு கிடைக்கனும் என முழக்கமிட்டார்.
மேலும் படிக்க: கிழவி வந்துட்டா .. ரசிகர்களால் அசிங்கப்படுத்தப்பட்ட கனவு கன்னி..!
இதேபோன்று நீதிமன்ற வளாகத்தில் சென்றபோது என்னைப் பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? வீதிக்கு ஒரு டாஸ்மாக் உள்ளது தெரியாதா எனவும் முழக்கமிட்டபடி சென்றார்.
TTF வாசனின் பைக் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது கார் ஓட்டையும் அவர் கைதாகி ஜாமினில் வெளியே வந்தார். இது தொடர்பாக, பலரும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். விஜே சித்து மீது கவனம் திரும்பியுள்ளது. அதாவது, விஜே சித்து என்ற youtube தளத்தில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். அதேபோல, அவரின் மொட்டை மாடி என்ற வீடியோக்களும் முக்கிய பட ப்ரமோஷன்களும் நிகழ்ச்சியாகவே மாறி உள்ளது. இந்த விவகாரத்தில் விஜே சித்து சிக்க முக்கிய காரணம் விலாக் வீடியோ ஒன்றில் சித்து போன் பேசிக் கொண்டே ஓட்டுகிறார். இதேபோல் செய்தததால் தான் TTF தற்போது, கைது செய்யப்பட்டார் என்பதால், தற்போது சிலர் சமூக வலைதளங்களில் சட்டம் அனைவருக்கும் சமம் அப்படி என்பதால் இருவரும் கைது செய்யப்பட வேண்டும் அல்லவா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.