“மூக்குத்தி அம்மன்” படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக நடிக்க இருந்தது இந்த நடிகையா ?

21 January 2021, 11:00 am
Quick Share

RJ பாலாஜி இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு ஹாட்ஸ்டார் OTT நிறுவனத்தில் மூக்குத்தி அம்மன் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்தார்.

RJ பாலாஜி சமீபத்தில் பிரபல யூ ட்யூப் சேனலில் அளித்த பேட்டியில், ” இந்த படத்தில் முதல் முதலாக அம்மனாக நடிக்க இருந்தது ஸ்ருதிஹாசன் என்று தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாசனிடம் கதை சொல்லி ஓகே ஆன பிறகு, நடிகை நயன்தாராவும் இந்த கதையை கேட்டு ஓகே சொல்லிவிட்டாராம். மார்கெட் விகிதத்தில் பார்க்கும்போது நடிகை நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தாராம் ஆர்.ஜே. பாலாஜி.

இதை பார்த்த ரசிகர்கள், மூக்குத்தி அம்மன் படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தால் படம் பஸ்பம் ஆகியிருக்கும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

Views: - 10

0

0