சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமாகி, பின்னர் வெற்றிகரமாக சினிமா உலகில் காமெடி நடிகராக உயர்ந்தவர் ரோபோ சங்கர். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் மஞ்சள் காமாலை காரணமாக அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அந்த நிலையிலிருந்து அவர் மீளுவது சாத்தியமே இல்லை என்று பலரும் கருதினர். ஆனால், தன்னம்பிக்கையுடனும் குடும்பத்தின் ஆதரவுடனும் குணமடைந்த அவர், பின்னர் தனது மகள் இந்திரஜாவின் திருமணத்தை சிறப்பாக நடத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இந்நிலையில், தற்போது ரோபோ சங்கர் மீண்டும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது தகவலாக வெளியாகியுள்ளது.
நீர்ச்சத்து குறைபாடு, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.