அஜித் செய்ததை போல பிரபல தெலுங்கு பட நடிகர் செய்த காரியம் : ‘தல‘ பட வில்லன் ஆதரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2021, 7:11 pm
Karthikeya Supports Pawan 1- Updatenews360
Quick Share

தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு பட்டப் பெயர்களை வைத்து குறிப்பிடும், அழைக்கும் பழக்கம் பல வருடங்களாக இருந்து வருகிறது. ஒரு ஹீரோ அறிமுகமாகி சில படம் ஹிட்டாக அமைந்தால் உடனே அவர்களுக்கு ஒரு பட்டப்பெயர்கை வைப்பது வழக்கமான ஒன்றுதான்.

தமிழ் சினிமாவைப் போலவே தெலுங்கு சினிமாவிலும் இந்த பட்டப் பெயர்களால் ஹீரோக்களை குறிப்பிடுவது இருந்து வருகிறது. ‘பவர் ஸ்டார்’ என கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அழைக்கப்படுபவர் பவன் கல்யாண்.

நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாணுக்கு தெலுங்கு பேசும் மாநிலங்களில் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. இவர் அரசியலி குதித்து கடந்த 2019 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித்தார்.

போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பவன் கல்யாண் தோற்றுப் போனார். இருந்தாலும் தொடர்ந்து அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் தன் பெயருக்கு முன்னால் வரும் ‘பவர் ஸ்டார்’ என்ற பட்டப் பெயரைப் போட வேண்டாம் என கட்டளையிட்டுள்ளார்.

சமீபத்தில் பவன் கல்யாணின் அக்கா மகன் சாய் தரம் தேஜ் நடித்து வெளிவர உள்ள ‘ரிபப்ளிக்’ படத்தின் விழாவில் கலந்து கொண்ட பவன்கல்யாண் “நீங்கள் எப்போதெல்லாம் ‘பவர் ஸ்டார்’ என்று குரல் எழுப்புகிறீர்களோ, அப்போதெல்லாம், ‘பவர்’ இல்லாமல் எதற்கு ‘பவர் ஸ்டார்’ என அழைக்கப்பட வேண்டும் என யோசித்துள்ளேன். உங்களால் ‘முதல்வர்’ என்று அழைக்கப்படுவதற்காக நான் இங்கு இல்லை,” என கோபமாகப் பேசினார்.

இந்த நிலையில் இவர் கோபமாக பேசுகிறார், தேர்தல் தோல்வியால் விரக்தியில் பேசுகிறார் என டோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில் பவன் கல்யாண் கருத்தை வழிமொழிகிறேன் என வலிமை படத்தின் வில்லனான கார்த்திகேயா கும்மகொண்டா டிவிட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதே போல பிரபல நடிகர் நானியும் தனது ஆதரவு கரங்களை நீட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டப் பெயரை பயன்படுத்த வேண்டாம் என நடிகர் அஜித் ஏற்கனவே அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

Views: - 396

6

0