“யோவ் உனக்கு வயசு வயசு ஆக ஆக மூளை குழம்பி போச்சா?” | கார்னர் செய்யப்படும் சுரேஷ் !

22 October 2020, 4:16 pm
Quick Share

தினமும் நம்ம வீட்டு பஞ்சாயத்தே பெரும் தலைவலியாக இருக்க, இதுல அடுத்தவன் வீட்டு பஞ்சாயத்து என்னவாக இருக்கிறது?, எந்த நிலைமையில் இருக்கிறது? என்பதை தெரிஞ்சிக்க மக்களுக்கு ஒரு தனி ஆர்வம். அதோட வெற்றியே பிக்பாஸில் இப்போது நான்காவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.

தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் வீட்டுக்குள் சிறப்பு பட்டிமன்றம் நடப்பதாக காட்டப்படுகிறது. அர்ச்சனா நடுவராக இருக்கும் இந்த பட்டிமன்றத்தில், போட்டியாளர்கள் வீட்டுக்குள் நடந்த பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்கின்றனர்.

அதில் ஜித்தன் ரமேஷ், “யோவ் உனக்கு வயசு வயசு ஆக ஆக மூளை குழம்பி போச்சா?” என்று சொல்கிறார். இதை பொதுவாக கேட்கிறாரா? அல்லது சுரேஷை பார்த்து கேட்கிறாரா ? என்பது நிகழ்ச்சியை பார்த்தால் மட்டும் தான் தெரியும். ஆனால் ஒன்று, வீட்டில் சுரேஷ் கார்னர் செய்யப்படுகிறார் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.

Views: - 25

0

0