Big Boss வீட்டில் Wild Card‌ Entry தரும் பிரேம்ஜி மற்றும் பரத் ! இனிதான் சூடு பிடிக்க போகுது !

26 November 2020, 5:55 pm
Quick Share

பிக்பாஸ் வீட்டில் இன்னும் பாலா – ஆரி பிரச்சனையே ஓய்ந்தபாடில்லை அதற்குள் இன்னொரு Wild Card Entry வரபோகிறார் ena pala தகவல்கள் வந்தது. அவர் யார் என்றால், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களான தெய்வம் தந்த வீடு, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் அஸீம்.

தற்போது, பரத் மற்றும் பிரேம்ஜி Big Boss வீட்டில் நுழைய போவதாக தகவல் வந்து கொண்டிருக்க, என்னடா இது என்று சமூக வலைதளங்களில் உள்ளே போய் பார்த்தால், பத்திரிகை ஊடகம் மீது செம்ம காண்டுதான் ஆனது.

பரத் தனது Twitter பக்கத்தில், ” இருக்குற டம்மி Contestants எல்லாரும் வெளியே துரத்துங்க, Boring” என்று போட்டார், உடனே அதற்கு பதில் அளிக்கும் விதமாக பிரேம்ஜி அவர்கள் ” ப்ரோ நாம வேணும்னா உள்ள போய்டலாமா?” என்று கேட்க,

அப்புறம் என்ன இதான் சாக்குன்னு மீடியா இந்த செய்தியை டாப் கியர்ல போய்ட்டாங்க.ஆனால் அவர்கள் இந்த சீஸனில் வீட்டுக்குள் வந்தால், இந்த சீசன் மட்டுமே 200 நாள் போகும்.

Views: - 0

0

0