ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-க்கு ஜீவனாம்சம் கொடுப்பாரா தனுஷ்.?

Author: Mari
19 January 2022, 6:29 pm
Quick Share

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிவதாக தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்தனர். இது சினிமாத்துறையினர் மத்தியில் மட்டுமல்லாமல், அவரது ரசிகர்களிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவாகரத்துக்கு என்ன காரணமாக இருக்கும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் சமுகவலைதளங்களில் இருவரும் சேர வேண்டும் என தனுஷ் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனுஷின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ், தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதனை விட ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி மற்றும் தமிழில் வெளியான அட்ரங்கீ திரைப்படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுள்ளது. தொடர்ந்து அவர் நடித்த படங்களும் வெளியாக தயார் நிலையில் இருக்கும் நிலையில், வாத்தி, ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் மற்றும் நானே வருவேன் என அடுத்து நடிக்க இருக்கும் படங்களின் பட்டியளும் வெளியாகியது. இதனால் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பை கணிசமாக உயர்த்தி உள்ளது என்றே கூறலாம்.

மேலும், தற்போது, தனுஷ் போயஸ் கார்டனில் பங்களாவை கட்டி வருகிறார், அதற்கான பூமி பூஜை போடப்பட்டது என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த பங்களாவின் மதிப்பு 150 கோடி என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனை தவிர அவரின் சொத்து மதிப்பு சுமார் 200 கோடி வரை இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-க்கு ஜீவனாம்சம் கொடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே கொடுத்தாலும் அவர் வாங்க மாட்டார் என்பதே உண்மை…

Views: - 226

2

0