பிக்பாஸ் மாயா மீது மாடல் அழகி MeToo புகார்.. ஆறிப்போன விஷயத்தை மீண்டும் கிளறிய நெட்டிசன்கள்..!

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மாயா S கிருஷ்ணன் என்ற போல்டான நடிகை போட்டியாளராக கலந்துக்கொண்டிருக்கிறார். அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள அவர் யார் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நிறைய குறும்படங்களில் தனது போல்டான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான “வானவில் வாழ்க்கை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு ரஜினியின் 2.o திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ஒரு விலை மாதுவாக நடித்தார். அந்த ரோல் ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தது.

தற்போது தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்திலும் இவர் ஒரு நல்ல கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். மேலும், விரைவில் வெளியாக உள்ள நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். இந்நிலையில், இவர் பிக்பாஸில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தன் நடவடிக்கைகளின் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆவார் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில், சக நடிகையான அனன்யா ராம் பிரசாத் என்பவர் மாயகிருஷ்ணன் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்ததை தற்போது நெட்டிசன்கள் கண்டுபிடித்து விமர்சகர்கள் மாயாவின் பழைய வழக்கையை மீண்டும் கிளப்பியுள்ளார்கள்.

அதாவது, அனன்யா 2016 ஆம் ஆண்டு நடிகை மாயா கிருஷ்ணனை சந்தித்ததாகவும், அப்போதுதான் படித்து முடித்து இருந்ததாகவும், அந்த சமயத்தில் மாயா சினிமாவில் பிரபலமாக இருந்ததால், ரிகர்சல் சமயத்தில் அவர் என் மீது பாசம் காட்டி எனக்கு வழிகாட்டியாக இருந்து நிறைய அட்வைஸ் செய்தார்.

அதனால், அவரை எனக்கு அப்போது பிடித்திருந்தது. பிறகு இருவரும் அன்பாக ஆரம்பித்தோம். மாயா கிருஷ்ணன் தனியாக தான் வசித்து வந்தார். நானும் அவருடன் தங்க ஆரம்பித்தேன். ஒரே வீட்டில் தூங்கும்போது என்னுடன் அவர் தவறாக நடந்து கொண்டார். கண்ட இடங்களில் தொடுவது எனக்கு முத்தம் கொடுப்பது போன்று என்னிடம் தவறாக நடந்து கொண்டார். இதை நான் கண்டித்தேன். ஆனால், அவர் இதெல்லாம் சாதாரண விஷயம் என்று என்னிடம் கூறினார் என்று அனன்யா தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து மாயா கூறுகையில், அனன்யாக்கூறியது அத்தனைத்துமே, பொய் இதனை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன். என் மீது அவர் வேண்டுமென்றே அவதூறு கிளப்புகிறார். அதனால், அவர் மீது வழக்கு தொடுத்திருக்கிறேன் என விளக்கமும் அளித்துவிட்டார். அதன் பிறகு அந்த விவகாரம் கொஞ்சம் ஆறி இருந்தது. தற்போது, மாயா பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கின்ற நிலையில் மாயாவின் பழைய விஷயங்களை மீண்டும் நெட்டிஷன்கள் கிளப்பி வருகின்றனர்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.