‘WWE Rock’ இவர் ஒரு வருடத்தில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..? வாயை பிளந்த ரசிகர்கள்..!

12 August 2020, 5:52 pm
Quick Share

உலக அளவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள் பட்டியலில் WWE Rock என அழைக்கப்படும் நடிகர் ‘டிவைன் ஜான்சன்’ முதலிடம் பிடித்துள்ளார்.

உலக அளவில் ஒரு ஆண்டில் அதிக ஊதியம் பெற்ற நடிகர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நடிகரும், மல்யுத்த வீரருமான டிவைன் ஜான்சன் முதலிடம் பிடித்துள்ளார்.

இவர் ஒரு வருடத்தில் வாங்கிய ஊதியத்தின் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 675 கோடி ஆகும். இவர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் இருப்பதாகவும் போர்ப்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

ரையான் ரெனால்ட்ஸ் 71.5 மில்லியன் டாலர் ஊதியத்துடன் 2வது இடத்திலும், மார்க் வால்பெர்க் 58 மில்லியன் டாளர் ஊதியத்துடன் 3வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவில் இருந்து பாலிவுட் நடிகர் அக்சய்குமார் 48.5 மில்லியன் டாளர் அதாவது இந்தியா மதிப்பில் 362 கோடி ஊதியத்துடன் 6ஆம் இடத்திலும் உள்ளார்.