தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர பின்புலம் இருந்தாலும் தனது சொந்த முயற்சியால் தான் முன்னேறி நல்ல இடத்திற்கு வருவேன் என்பதை லட்சியமாக வைத்து அயராது உழைத்துக்கொண்டிருப்பவர் நடிகை ரிச்சர்ட் ரிஷி. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தின் சொந்த மச்சான். ஆம், நடிகை ஷாலினியின் அண்ணன் தான் ரிச்சர்ட் ரிஷி.
இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் சில மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி படத்தில் நடித்து விமர்சிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது இயக்கத்திலே ருத்ர தாண்டவம் என்ற ஜாதிவெறி மற்றும் தலித் விரோத உணர்வுகளைப் பரப்பிய படத்தில் நடித்ததால் மோசமான விமர்சனத்தை எதிர்கொண்டார்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து கவனம் செலுத்தி வந்த ரிச்சர்ட் ரிஷி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரபல கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்தை காதலிப்பதாக முத்த புகைப்படத்துடன் அதிகாரபூர்வமாக அறிவித்து காதலை உறுதிப்படுத்தியிருக்கிறார். அஜித் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் முழுக்க வைரலாக ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் வீக் எண்டில் ரொமான்டிக் அவுட்டிங் சென்ற போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு காதலை பொழிந்துள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ், என்ன தலைவா உனக்கு ஊருல எந்த பொண்ணும் கிடைக்கலையா? என ட்ரோல் செய்து இது அஜித் சாருக்கு தெரியுமா? என விமர்சித்துள்ளனர். மேலும் ” ரிச்சர்ட் நீங்க தான் அடுத்த Accident” கூடிய விரைவில் உங்களை பாலிமர் செய்தியில் பார்க்கிறோம் என விமர்சித்துள்ளனர்.
நடிகை ஷாலினியின் தம்பியும் நடிகரமான ரிச்சர்ட் ரிஷி நெருக்கமாகவும் யாஷிகாவிற்கு முத்தம் கொடுப்பது போலவும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரிதாக பகிரப்பட்டு கேலியும் கிண்டலும் செய்து வந்தநிலையில், இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது குறித்தும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் இணைந்து சில நொடிகள் என்ற படத்தில் நடித்து வருவதாகவும், கன்னட இயக்குனர் வினை பரத்வாஜ் இயக்கத்தில், நடித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், இந்த படத்தின் புகைப்படத்தை தான் பகிர்ந்ததாகவும் கதைப்படி தானும் யாஷிகாவும் சுற்றுலா செல்வது போல் எடுக்கப்பட்டதாகும் செல்பி எடுப்பது போன்ற காட்சிகள் அதிகப்படியாக இருந்ததாகவும், மற்றபடி தனக்கும் யாஷிகாவிற்கும் எந்த காதலும் கிடையாது கல்யாணமும் கிடையாது என்றும், வெளியூரில் இருந்ததால் இது பற்றி உடனே பேச முடியாமல் போனதாகவும் தற்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதில் அளித்துள்ளார்.
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
This website uses cookies.