கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் வாரிசு நடிகை என்ற அந்தஸ்துடன் சினிமாவில் நுழைந்தாலும் தனக்கென தனி இடத்தையும் தன் திறமையால் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிகை என்பதை தாண்டி பாடகியாகவும் இருந்து வருகிறார் .
இவர் தற்போது சலார் 2 மற்றும் சென்னை ஸ்டோரி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் தன காதலன் உடன் பிரேக் அப் செய்துவிட்டு தற்போது சிங்கிள் வாழ்க்கை ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.
இவர் மும்பையில் சென்று செட்டிலாகி ஹிந்தி மற்றும் அங்கிருந்தபடியே தமிழ் படங்களிலும் கவனத்தை செலுத்துகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுருதிஹாசனிடம் முக அழகுக்காக நீங்கள் சர்ஜரி செய்திருக்கிறீர்களா? என கேள்வி கேட்டதற்கு..
ஆமாம் நான் செய்திருக்கிறேன். எல்லோரும் அதை செய்திருக்கிறார்கள். நான் மட்டும் இல்லை ஆண்களும் அதை செய்கிறார்கள். நீங்கள் அதை கவனிக்கவில்லை என்றால் காந்த கண்ணாடி போட்டு பாருங்கள் உங்களுக்கு தெரியும்.
இதனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் என் உடலுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விரும்பி செய்கிறேன் அதை விளம்பரப்படுத்த தேவையில்லை. மும்பையில் பல கோடி மதிப்புள்ள பங்களா ஒன்றை தான் சம்பாதித்த பணத்தில் கட்டி வருகிறார் ஸ்ருதிஹாசன். திருமணம் குறித்த கேள்விக்கு இன்னும் சில ஆண்டுகள் திருமணம் செய்ய மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.