குழந்தை போல சிரித்த விஜயகாந்த்..! கேப்டனை சந்தித்த யோகி பாபு..! வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
3 November 2022, 1:45 pm
yogibabu vijayakanth - updatenews360
Quick Share

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் வீட்டை விட்டு வெளியே வருவது இல்லை. அப்படி அவர் எப்பொழுதாவது வெளியே வந்தால் அவரை காண ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் கூடிவிடுகிறார்கள்.

அவர் கூட்டத்தை பார்த்து கையசைத்தாலே மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். விஜயாந்த் விரைவில் குணமடைந்து பழைய கேப்டனாக வர வேண்டும் என்று ரசிகர்களும், தேமுதிகவினரும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

yogi-babu-1 -updatenews360

கேப்டன் தற்போது எப்படி இருக்கிறார். ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் விஜயகாந்தை சந்தித்து பேசியிருக்கிறார் யோகி பாபு.

கெத்தா கூலிங் கிளாஸ் அணிந்து கேப்டன் அமர்ந்திருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அந்த வானத்தை போல மனம் படைத்த பாடலை பேக்கிரவுண்டில் ஓடவிட்டிருக்கிறார் யோகி பாபு.

அந்த வீடியோவில் விஜயகாந்த் சிரித்தது தான் அனைவரையும் கவர்ந்துவிட்டது. வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, கேப்டனை சந்தித்த வீடியோவை வெளியிட்டதற்கு நன்றி. அந்த குழந்தை சிரிப்பு இருக்கே. அதை தான் மறக்க முடியவில்லை.

அவர் சிரிப்பதை பார்த்து தானாக கண் கலங்குகிறது. சர்க்கரை நோயால் கால் விரல்களை அகறறிவிட்டார்கள். அதனால் வீட்டோடு இருக்கிறார் பாவம் அனைவருக்கும் தன் சொந்த பணத்தில் உதவி செய்பவர் கேப்டன். தங்க மனசுக்காரர். இந்திய சினிமாவின் நிஜமான ஹீரோ கேப்டன் தான் என தெரிவித்துள்ளனர்.

Views: - 172

0

0