பள்ளி நாட்களில் கிரிக்கெட் சாம்பியனாக இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட யோகி பாபு

23 June 2020, 11:20 pm
Quick Share

யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக உள்ளார், அவர் குறைந்தது கையில் இருபது படங்களை வைத்திருக்கிறார். மேலும் அதில் அவர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார், மற்ற முன்னணி ஹீரோக்களுடன் சேர்த்து நகைச்சுவையில் கலக்கி கொண்டிருக்கிறார். குண்டான தோற்றம் இருந்தபோதிலும் அவர் ஒரு விளையாட்டு வீரர் என்பது தளபதி விஜய்யின் ‘பிகில் படத்தின் போது நடந்த விழாக்களில் அவர் தெரிவித்திருக்கிறார்.

யோகி பாபு இப்போது தனது பள்ளி நாட்களில் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவரும் அவரது அணியினரும் தேசிய மற்றும் மாநில சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளனர் என்று பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தில் வலதுபுறத்தில் தரையில் உக்கார்ந்திருப்பவர்களில் அவர் இரண்டாவது இடத்தில் ஒரு சர்டிபிகேட்டை கையில் பிடித்தவாறு அமர்ந்திருக்கிறார்.

அடுத்ததாக யோகி பாபுவின் வரவிருக்கும் படங்கள் நடிகர் சந்தானத்துடன் ‘டிக்கிலோனா’, விஜய் சேதுபதியுடன் ‘கடைசி விவசாயி’, சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’ மற்றும் ‘பன்னி குட்டி’, ‘ட்ரிப்’,’டேனி’ மற்றும் ‘மண்டேலா’ போன்று பல உள்ளன.