தலையில கேப், ஃபேஸ்ல மாஸ்க், கைல பேட்டு: வைரலாகும் யோகி பாபுவின் கிரிக்கெட் வீடியோ!

26 January 2021, 4:41 pm
Quick Share

கைல பேட்ட பிடிச்சு மைதானத்துல கிரிக்கெட் ஆடும் யோகி பாபுவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகர் யோகி பாபு. ரஜினிகாந்த், விஜய், அஜித் என்று மாஸ் நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு மஞ்சு பார்கவி என்பவரை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து, கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி யோகி பாபுவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தற்போது யோகி பாபு நடிப்பில், டிக்கிலோனா, சைதான் கா பச்சா, சதுரங்க வேட்டை 2, அடங்காதே, ஜகஜால கில்லாடி, பன்னி குட்டி, கடைசி விவசாயி, பிஸ்தா, பேய் மாமா, பூச்சாண்டி, டாக்டர், சலூன், வெள்ளை யானை, மண்டேலா என்று ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இது தவிர, இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பொம்மை நாயகி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில், யோகி பாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை நடிகரும்,

நிகழ்ச்சி தொகுப்பாளருமான மாகாபா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் எந்தப் பந்தையும் கீப்பர் பக்கம் விடாமல், தொடர்ந்து நேர்த்தியான கிரிக்கெட் வீரர் போன்று ஒவ்வொரு பந்தையும் விளாசுகிறார். மாஸ்க் போட்டிருந்தபடி கிரிக்கெட் விளையாடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்னதாக பிகில், ஜடா உள்பட பல படங்களில் கால்பந்து விளையாட்டு வீரராக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CKbqcREBy7U/?utm_source=ig_web_copy_link

Views: - 8

0

0