“இந்த காஸ்டியூம்லாம் போட முடியாது” – எஸ்கேப் ஆன அனுஷ்கா ! மாட்டிகொண்ட சமந்தா !

22 January 2021, 2:30 pm
Quick Share

குண்டாக இருப்பதால், கடும் மன உழைச்சலில் இருக்கிறார் நம்ம அனுஷ்கா. இதனால், பட வாய்ப்புகளும் வரவில்லை, ஆனாலும் தமிழில் இருந்து வந்த கொஞ்ச நஞ்ச அழைப்புகளையும் நிராகரித்து விட்டார், என்ன என்று பார்த்தால், இங்கு எதோ ஒரு விஷயம் அவரை பயங்கர காயப்படுத்தி உள்ளதாக சொல்கிறார்கள்.

தற்போது புதிய தெலுகு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதனை ‘பாகமதி’ படத்தைத் தயாரித்த நிறுவனம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் தீயாக பரவி வந்தது. ஆனால் தற்போது, அதை எல்லாம் பொய் என மறுத்து, பிகினி போட சொன்னா கூட எனக்கு ஓகே என்று இன்றும் அதே கெத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்தார். தற்போது இவர் நடித்த அருந்ததி, பாகுபலி என அனுஷ்கா கம்பீரமாக நடித்த படங்கள் வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் அனுஷ்கா ‘சகுந்தலம்’ என்னும் வரலாற்று படத்தில் மேலாடை அணியாத காஸ்ட்யூம்களை அணிய முடியாது என்ற ஒரே காரணத்திற்காக அனுஷ்கா இந்த படத்திலிருந்து விலகியுள்ளாராம். இதனால் அந்தப் படத்தில் நடிக்க சமந்தாவை தேர்வு செய்து இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

Views: - 15

0

0