சிவகார்த்திகேயன் லீலைகள் லீக்… இமான் மனைவியுடன் ஆபாச பேச்சு – ஆதாரத்துடன் கூறிய பிரபலம்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் அயலான் திரைப்படம் உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 2017ம் ஆண்டே துவங்கிய இப்படம் சில பிரச்சனையால் 5 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இப்படியான நேரத்தில் இசையமைப்பாளர் டி. இமான் சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று பேட்டி ஒன்றில் கூறியது சினிமா வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை இமான் மனைவியுடன் சிவகார்த்திகேயன் தகாத உறவு வைத்திருந்திருக்கிறார். அதைத்தான் இமான் துரோகம் என சொல்கிறார் என்றெல்லாம் கண்ணு, காது, மூக்கு வைத்து இஷ்டத்துக்கும் வதந்திகள் எழுதி வெளியிட்டிருந்தது பரபரப்பான செய்தியாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் இமான் மனைவியுடன் ரகசிய முறையில் ஆபாசமாக பேசியது உண்மை தான் என பிரபல யூடியூபர் அந்தகன் கூறியுள்ளார். மேலும், இதுகுறித்த ஆதாரமும் உள்ளது என்றும் இது முழுக்க முழுக்க சிவகார்த்திகேயன் தப்பு மட்டும் இல்லை. இமான் மனைவி அந்த அளவிற்கு இடம் கொடுத்ததால் தான் சிவகார்த்திகேயன் வழிமாறி சென்றதாக அவர் அந்த பேட்டியில் அமிழ்ந்துபோன நெருப்பில் எண்ணெய் ஊற்றி எரியவிட்டுள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

7 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

7 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

7 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

8 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

8 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

9 hours ago

This website uses cookies.