இளையராஜாவை எதிர்க்கிறாரா மகன் யுவன்சங்கர் ராஜா… ? திடீரென செய்த செயல்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!!

Author: Babu Lakshmanan
18 April 2022, 2:56 pm
Quick Share

ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டது. இந்தப் புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை ஒன்றை எழுதியிருந்தார். அதாவது, பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது.

சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார், முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள். என பிரதமர் மோடியை அவர் புகழ்ந்து எழுதியிருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. மேலும், டுவிட்டரில் இளையராஜாவுக்கு எதிராக ஹேஷ்டேக்கும் டிரெண்ட் செய்யப்பட்டது.

Ilayaraja Compares Narendra Modi With DR. B.R. Ambedkar In Foreword To Book!

பாஜகவை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது என்று திராவிடக் கட்சிகள் கங்கனம் கட்டி வரும் நிலையில், தமிழகத்தில் பிரபலமான ஒரு திரையுலக பிரபலம், பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக் கூறுவதா..? என்று திராவிட இயக்கத் தலைவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

கடும் விமர்சனங்கள் எழுந்த போதிலும், எனது சொந்தக் கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று இளையராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், திராவிடக் கட்சிகள் மேலும் நொந்து போயுள்ளன. மேலும், இளையராஜாவுக்கு பாஜக மீது திடீர் கரிசனம் என்ன..? அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவியைக் கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதா..? என்று பல்வேறு கேள்விகளும், கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றன.

Annamalai Protest - Updatenews360

அதேவேளையில், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இளையராஜாவின் கருத்தை வரவேற்று, ஆதரவாக கருத்துக்களை கூறி வருகின்றன. என்றும் ராஜா… எங்கள் ராஜாதான் என்றும் டுவிட்டரில் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்து பதிலடி கொடுத்து வருகின்றன.

இளையராஜாவுக்கு எதிராக இருதரப்பினரும் மாறிமாறி கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், அவரது மகன் யுவன்சங்கர் ராஜா சமூகவலைதளங்களில் போட்ட திடீர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை இளையராஜா பிரதமர் மோடிக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்ட நிலையில், திராவிடத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ‘கருப்பு திராவிடன் பெருமைக்குரிய தமிழன்’ என கருப்பு நிற உடை அணிந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம், தந்தையின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்தப் பதிவை யுவன்சங்கர் ராஜா போட்டாரா..? என்று பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே, இந்தி தெரியாது போடா..? உள்ளிட்ட டீசர்ட்டுகளை அணிந்து, இந்திக்கு எதிரான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியவர் யுவன். எனவே, தற்போது, தனது தந்தையின் பாஜக ஆதரவு பேச்சுக்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பதில் எந்த ஆச்சர்யமுமில்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

திரையுலகின் பிரபலமான ஒரு குடும்பத்தில், அரசியல் காரணங்களால் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 713

0

0