விஜய் பிறந்தநாளுக்கு அஜித் ரசிகர்களுக்கு கிடைத்த வலிமை Update – யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட தகவல் !

22 June 2021, 9:10 am
Quick Share

தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை படங்களை இயக்கிய H.வினோத், தல நடிக்கும் வலிமை படத்தை இயக்கி வருகிறார். பிரபல இந்திப் பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.

தற்போது இந்த வினோத் அஜித் கூட்டணி அடுத்த படத்திலும், இணைய போகிறார்களாம். வலிமை படத்தில் 95 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்த்து ஏமாந்து போனதுதான் மிச்சம்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் வீரர்களிடம் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்க தொடங்கிவிட்டனர். இந்தியா – நியூஸிலாந்து இடையே நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரசிகர் ஒருவர் போர்டில் வலிமை அப்டேட் என எழுதி காட்ட அந்த புகைப்படம் காட்டு தீ போல் பரவி உள்ளது.

இப்படி அஜித் ரசிகர்கள் அப்டேட்க்காக ஏங்கி கொண்டிருந்த நேரத்தில் மாநாடு படத்தின் புரமோஷனுக்காக கிளப் அவுஸில் வந்து அப்டேட் கொடுத்துள்ளார் வலிமை படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

வலிமை திரைப்படத்தில் Mother Song ஒன்று சிறப்பாக வந்துள்ளதாகவும் தல Intro Song சூப்பராக வந்துள்ளதாகவும் விஜய் பிறந்தநாள் அன்று யுவன்சங்கர்ராஜா தெரிவிக்க உற்சாகத்தில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

Views: - 332

13

3