“இது என்ன குட்டி பிக்பாஸ் மாதிரியே இருக்கு” Z தமிழ் சேனல் வெளியிட்ட புதிய புரோமோ…!

Author: Udayaraman
15 October 2020, 3:21 pm
Quick Share

Z தமிழ் தொலைக்காட்சி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே ஒரு புதிய நிகழ்ச்சி ஒன்று உருவாக இருக்கிறது போல, அதற்கான Promo ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருவது போலவே மைக் அணிந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நடிகர்கள் சிலரை, ஒரே வீட்டில் மூன்று நாட்கள் தங்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

என்னடா இது புது புரளியா இருக்கு, என்று சற்று யோசிக்க ஆரம்பிச்சா விரைவில் நடக்க இருக்கும் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2020 நிகழ்ச்சியின் ஒரு முன்னோட்டமாக இந்த ஏற்பாடு செய்து இருக்கலாம் என்று யோசிக்கத் தோன்றுகிறது.

அதன்படி 26 நட்சத்திரங்கள் மூன்று நாட்கள் ஒரே வீட்டில் இருக்கப் போகின்றார்களாம். அவர்களுக்கு என்று தனியாக Beds, Rooms மற்றும் தேவையான பொருட்கள் Arrange செய்து தரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் “இது என்ன குட்டி பிக்பாஸ் மாதிரியே இருக்கு” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 166

0

0