தனித்தீவில் பட்டையைக் கிளப்பும் சிம்பு..! வேற லெவல் Entertainment Guaranteed

17 June 2021, 8:36 pm
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்தது 100 நாட்கள் ஒரே வீட்டில் யார் தாக்கி இருக்கிறார்கள் அவர்களை வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். தற்போது அதை மிஞ்சும் அளவு அடுத்த கட்டத்திற்கு தயாராகியுள்ளது தமிழ் சின்னத்திரை. அமெரிக்காவின் பேமஸ் ஆன சர்வைவர் தொடர் தமிழுக்கு வர இருக்கிறது.

ஒரு தீவில் குறிப்பிட்ட போட்டியாளர்களை தங்க வைத்து கடைசிவரை யார் தாக்கு பிடிக்கிறார்கள் என்பதே சர்வைவர் நிகழ்ச்சியின் நோக்கம். இதில் பிக்பாஸ் போலவே பல டாஸ்க் கொடுக்கப்பட்டு அதில் வெற்றி பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்த நிகழ்ச்சியின் தமிழ் உரிமையை ஜீ தமிழ் வாங்கியிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தமிழில் பல முன்னணி நடிகர்களை கேட்டு வந்தனர் அதற்கு யாரும் பதில் தரவில்லை. சிம்பு மட்டும் ஏற்ப பச்சைக் கொடி காட்டியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் உண்மையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்னொரு பக்கம் அர்ஜுன் இதற்கு சரியாக வருவார் என சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியோ நமக்கு என்டர்டைமெண்ட் கிடைச்சா ஓகே…!

Views: - 403

8

6