வைகைப்புயல் வடிவேலு பல கோடிக்கணக்கான தமிழ் மக்களின் மனதை தன்னுடைய காமெடி மூலம் கவர்ந்து இழுத்தார். பல்வேறு நட்சத்திர நடிகர்களின் படங்களில் தவறாமல் நடிகர் வடிவேலுவின் காமெடி இடம் பெற்றுவிடும். அந்த அளவுக்கு பிரபலமான நடிகராக தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தார்.
மதுரை சொந்த ஊராக கொண்ட இவர். 1988 டி ராஜேந்தர் இயக்கத்தில் என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதை அடுத்து பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை வேடம் ஏற்று தன்னுடைய பாடி லாங்குவேஜ் மற்றும் கலகலப்பான டயலாக் டெலிவரி மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தார்.
நடிகர் வடிவேலு கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய், சிம்பு , தனுஷ் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களில் தவறாமல் இடம் பெற்றுவிடுவார். அந்த அளவுக்கு பெரும் புகழ் பெற்றார். மிகக்குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சியை அடைந்த வடிவேலு இன்று தனது 64 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் .
இதற்கு முன்னதாக சில வருடங்களுக்கும் முன்னர் நடிகர் வடிவேலு ஒழுங்காக திரைப்படங்களில் நடிக்கவில்லை. படப்பிடிப்பிற்கு சரியாக வருவதில்லை. முன்பணம் வாங்கிவிட்டு படங்களில் நடிக்காமல் ஏமாற்றுவது போன்ற குற்றச்சாட்டுகளால் சினிமாவில் ரெட் கார்டு கொடுத்து நடிக்க விடாமல் தடை செய்யப்பட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்: இதுக்கு தான் சரியான நபரை தேர்வு செய்யவேண்டும்… விவாகரத்து குறித்து பேசி வம்பில் மாட்டிய திரிஷா!
இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த தடை நீங்கி இரண்டாவது இன்னிங்சில் கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகர் வடிவேலு. இந்த நிலையில் இன்று பிறந்த நாள் ஸ்பெஷலாக அவரது சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்து இருக்கிறது. மதுரையில் பல ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கும் வடிவேலு அங்கு மிகப் பிரமாண்டமான சொகுசு பங்களா ஒன்றையும் கட்டியிருக்கிறார்.
இது தவிர சென்னையில் இரண்டு பங்களா ,ஆடி கார், bmw கார், போன்ற சொகுசு ரக கார்களையும் வைத்திருக்கிறார். இப்படி மொத்தம் நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு ரூபாய் 150 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. முன்னணி நடிகர்களுக்கு ஆட்டம் கொடுக்கும் வகையில் காமெடி நடிகரான வடிவேலுவின் சொத்து இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். மேலும் அவரின் பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
0
0