கிளாமர் காட்சிகளில் நடிப்பது ஏன்…? நடிகை அதுல்யா ரவி சொன்ன பதில்..!!

Author: Babu Lakshmanan
2 November 2022, 9:53 pm
Athulya Ravi-updatenews360
Quick Share

திரைத்துறையில் நடிகைகள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை எனவும், கதைக்கு என்ன தேவையோ, அதையே தாங்கள் செய்து வருகிறோம் என நடிகை அதுல்யா ரவி தெரிவித்துள்ளார்.

கோவை ராஜவீதி பகுதியில் உள்ள பிரபல தங்க நகை விற்பனை நிறுவனம், சர்வதேச வைர வர்த்தக நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ் திரைப்பட நடிகை அதுல்யா ரவி புதிய வடிவமைப்பிலான வைர நகைகளை அறிமுகம் செய்து வைத்தார்.

athulya ravi - updatenews360

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பெரும்பாலான பெண்களுக்கு வைரம் பிடிக்கும் எனவும், எந்த ஒரு விழா என்றாலும் வைர நகை அணியும் போது பெண்கள் ராணி போன்று இருப்பார்கள் என்றும் தெரிவித்தார். தனது நடிப்பில் இதுவரை இரண்டு, மூன்று படங்கள் வெளியாகி உள்ளதாகவும், தெலுங்கு படத்தில் தற்போது நடித்து வருவதாகவும், தமிழிலும் தான் நடித்த ஒரு படம் விரைவில் வெளியாக உள்ளது, எனவும் கூறினார்.

athulya ravi - updatenews360

மேலும், நடிகைகள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்ற கருத்து தவறானது எனவும், கதைக்கு எது தேவையோ, அதை மட்டுமே செய்து வருகிறோம் என கூறியதுடன், திரைப்படங்களில் நடிகைகளின் நிறத்தில் எந்த பாகுபாடும் இல்லை எனவும், நல்ல கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும், எனவும் குறிப்பிட்டார்.

athulya ravi - updatenews360

Views: - 185

0

0