தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து 2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் பிரபலமான ஹீரோவாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் அரவிந்த்சாமி. பெண்களின் பேவரைட் ஹீரோவாக ஹேண்ட்ஸ்ம் லுக்கில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அரவிந்த்சாமி இன்றும் பலரின் பேவரைட் ஹீரோ தான்.
அவரது நடிப்பில் வெளிவந்த வெற்றி திரைப்படங்களான ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம் ,அலைபாயுதே போன்ற திரைப்படங்கள் இன்றளவும் பலரது பேவரைட் திரைப்படமாக இருந்து வருகிறது .
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் அரவிந்த்சாமி கிட்டத்தட்ட 57 வயதாகியும் கூட தற்போது வரை ஹேண்ட்ஸம் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.
தொடர்ச்சியாக கிடைக்கும் பட வாய்ப்புகளில் முக்கியமான கதாபாத்திரங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பிரபல தொகுப்பாளரான கோபியுடன் கலந்து கொண்ட நேர்காணலில் அவர் ஒரு கேள்வி எழுப்பி அந்த கேள்விக்கு அவரே ஒரு பதில் அளித்து அனைவரையும் பெருமிதப்படுத்தி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
அதாவது, இப்போ உங்களோட மகனாஎனக்கு இப்போ ஒரு பதில் சொல்லுங்க.. நீங்க ஒரு சராசரி அப்பாவா உங்களோட பையன் வந்து உங்ககிட்ட… நான் நடிகர் அரவிந்த்சாமியின் ரசிகர் மன்றத்தில் சேர போகிறேன் என்று உங்களிடம் சொன்னால் உங்களோட பதில் என்னவாக இருக்கும்? என கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த கோபி… கண்டிப்பா நான் அதற்கு அனுமதிக்க மாட்டேன்.
போய் படம் பாரு…. என்ஜாய் பண்ணு…. அவ்வளவுதான் உன் வேலைய பாரு என்று கூறிவிடுவேன் என கூறினார். சிம்பிள் இதேதான் நானும் சொல்லுவேன். என் மகனுக்கு ஒரு அட்வைஸ் ஊரான் மகனுக்கு ஒரு அட்வைஸ் கொடுக்க முடியுமா? என அரவிந்த்சாமி மிகவும் தைரியமாக போல்டான பதிலை கூறினார்.
இதையும் படியுங்கள்: கோட் படத்தை வேண்டாம்னு ஒதுக்கிய நயன்தாரா…. விஷயமே அங்க தான் இருக்கு!
ஒரு மிகச்சிறந்த நடிகராக இருந்து கொண்டு நான் என்னுடைய ரசிகர் மன்றத்தில் சேருங்கள் என நிச்சயம் கூறமாட்டேன் என வெளிப்படையாக பேசி இருக்கும் அரவிந்த்சாமியின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் எல்லோரும் அடுத்த அஜித் நீங்க தான்யா எனக் கூறிய அவரை பெருமை பாராட்டி வருகிறார்கள்.
This is the thought process from#AjithKumar ayya !!
— Prakash (@prakashpins) September 18, 2024
Bold Speech @thearvindswamipic.twitter.com/mn082kqnFE
0
0