அந்த சத்தம்.. 3 வருட இடைவெளி.. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா கங்குவா?

Author: Hariharasudhan
13 November 2024, 6:59 pm

சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா கதாநாயகனாக நடித்த கங்குவா திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

கோயம்புத்தூர்: தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் என்ற அடையாளத்துடன், சிவகுமார் மகனாக சரவணன் என்ற சூர்யா அறிமுகமானார். இவ்வாறு அவர் அறிமுகமானதும், ஒரு திரை வாரிசான விஜய் உடன் தான். ஆம், 1997ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் என்ற படத்தில் டான்ஸ் கூட ஆடத் தெரியாத நபராகவே சூர்யா வந்தார்.

பின்னர், பாலா இயக்கத்தில் வெளியான நந்தா திரைப்படம், சூர்யாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. காக்க காக்க படத்தின் மூலம் ஆக்‌ஷன் தளத்திற்கு வெகு விரைவில் வந்த சூர்யா, பிதாமகன் மூலம் கவனிக்கத்தக்க நடிகர்களில் ஒருவராக மாறினார். பின்னர், வாரணம் ஆயிரம், கஜினி போன்ற காதல் படங்களிலும் சூர்யா நடித்தார்.

இதனால், சூர்யாவுக்கு இளைஞர்களை விட இளைஞிகளின் பலம் அதிகமானது. இதனையடுத்து, இயக்குனர் ஹரி உடன் கைகோர்த்த சூர்யா, சிங்கம் சீரிஸில் தொடர் வெற்றிகளைக் கொடுக்க, தெலுங்கு உலகிலும் கோலோச்சினார். இதுவரை தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், பிலிம்பேர் விருது உள்பட பல்வேறு திரை விருதுகளையும் பெற்றார்.

இந்த நிலையில், கரோனா காலக்கட்டம் சூர்யாவின் திரை வாழ்க்கையை திருப்பிப் போட்டது. காரணம், சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாக, ரசிகர்களின் ஆதரவை இழந்தது போன்ற பிம்பம் உருவானது. இருப்பினும், இந்த இரு படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்று தந்தது.

அதிலும், சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருதையும் சூர்யா பெற்றார். இதனிடையே, பாண்டிராஜ் இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியானது. திரையரங்குகளில் வெளியானாலும், இப்படம் தோல்வியையே சந்தித்தது. இதற்குப் பிறகு சூர்யா கதாநாயகனாக நடித்து ஒரு படம் கூட தியேட்டர்களில் வெளியாகவில்லை.

SURIYA KANGUVA

இருப்பினும், விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மொத்த படத்தையும் சாப்பிட்டு இருப்பார் சூர்யா. அடுத்ததாக, நம்பி ராக்கெட்ரி விளைவு படத்திலும் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். அதன் பிறகு, சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கான சர்ஃபிராவில் சூர்யா கேமியோவிலே நடித்திருப்பார்.

இதையும் படிங்க: டீ… பன் சாப்பிட கூட காசு இருக்காது… 5 ரூபாய் சம்பளத்துல – கவுண்டமணி இவ்வளவு நல்லவரா?

இந்த நிலையில் தான், முழுக்க முழுக்க கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்து உள்ள கங்குவா திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு உள்ள இப்படம் நாளை விசில் சத்தங்களால் நிரம்ப இருக்கிறது.

“தெலுங்கில் பாகுபலி, ஆர்ஆர்ஆர், கல்கி ஆகிய பீரியாடிக்கல் படங்கள் வெளியானாலும், தமிழில் இது முதல் முறை என நினைக்கிறேன். ரசிகர்கள் உடன் சேர்ந்து கங்குவா படத்தைப் பார்க்க நான் ஆவலாக உள்ளேன்” என சூர்யா ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 191

    0

    0