ஜெயம் ரவி – ஆர்த்தி இருவரும் சமரச மையத்தில் பேசி தீர்வு காண குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: நட்சத்திர தம்பதியாக வலம் வந்தவர்கள் ஜெயம் ரவி – ஆர்த்தி. இவர்கள் இருவருக்கும் சமீப காலமாக மனக்கசப்புகள் இருந்து வந்ததை அவர்களது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலமாக அறிய முடிந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இருவரும் பிரிவு அறிக்கையை வெளியிட்டனர்.
இதனிடையே, ஆர்த்தியிடம் இருந்து ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (நவ.15) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயம் ரவி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார். அதேநேரம், ஆர்த்தி காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், ஜெயம் ரவி – ஆர்த்தி இருவரும் சமரச மையத்தில் பேசி தீர்வு காண வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். இதனால் இருவரும் ஆலோசனைகளைப் பெற்று சமரச மையத்தில் விரைவில் பேச உள்ளனர். மேலும், இருவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே அவர்களது விருப்பமாக இருக்கிறது.
ஜெயம் ரவி – ஆர்த்தி திருமணம்: முன்னதாக, கடந்த 2009ஆம் ஆண்டு திரைப்படத் தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தியை ஜெயம் ரவி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த தம்பதி மகிழ்ச்சியாகவே தங்களது இல்லற வாழ்வை வசித்து வந்தனர்.
இதையும் படிங்க; மகனுக்காக படப்பிடிப்பில் காஜல் அகர்வால் செய்த செயல் : ராயல் சல்யூட்!
இதனிடையே தான், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். முக்கியமாக, சமூக வலைத்தளங்களில் தனது மனைவியின் புகைப்படங்களையும், பெயரையும் ஜெயம் ரவி நீக்கி இருந்தது, இருவருக்கும் இடையே விரிசல் இருந்ததை தெரியப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.