தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்த அந்தஸ்திலிருந்து வரும் நடிகர் விஜய் கடைசியாக கோட் திரைப்படத்தில் நடித்து முடித்தார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதுதான் அவரது கடைசி திரைப்படம். இதை அடுத்து அவர் சினிமா பக்கமே திரும்பாமல் முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபட்டு இருக்கிறார். மும்முரமாக அதற்கான வேலைகளை செய்து வருகிறார் நடிகர் விஜய் .
நடிகர் விஜய்யின் நடனத்திற்கு ஏகப்பட்ட கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ரசிகர்களையும் தாண்டி பிரபலங்கள் நட்சத்திர நடிகர்கள் பலரும் விஜய்யின் நடனத்திற்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். அப்படித்தான் தெலுங்கு சினிமாவில் ஸ்டார் ஹீரோவான ஜூனியர் என்டிஆர் நான் விஜய்யின் நடனத்திற்கு தீவிரமான ரசிகன் என கூறி இருக்கிறார் .
இதையும் படியுங்கள் :16 வருட வாழ்க்கை… கணவர் குறித்து கண்கலங்கி பேசிய நீலிமா ராணி – வீடியோ!
சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசி அவர் விஜய்யின் நடனம் என்பதே தனித்துவம் தான். நடனம் என்பது மிக அழகான ஒரு விஷயம் அதை சண்டை போடுவது போல ஜிம்னாஸ்டிக் போலவோ செய்யவே கூடாது.
இயல்பாக ஆட வேண்டும். அதை நடிகர் விஜய் சிறப்பாக செய்து வருகிறார். அவரது நடனத்திற்கு நான் மிகப்பெரிய ஃபேன். நாங்கள் முன்பு நல்ல நண்பர்களாக இருந்தோம். அடிக்கடி பேசிக் கொள்வோம் ஆனால், சமீப ஆண்டுகளாக எங்களுக்குள் எந்த ஒரு தொடர்பும் இல்லை என வருத்தத்தோடு தெரிவித்தார் ஜூனியர் என்டிஆர்.
0
0