ஒரு படத்துக்கே இந்த ஆட்டமா? ஓவர் போதையால் பிரபல நடிகரின் ஓட்டுநர் உரிமம் ரத்து!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2024, 5:07 pm

போதை விருந்து, சாலை விபத்து என சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படடுள்ளது.

ஒரு படம் ஓடினால் எதோ சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு சில இளம் நடிகர்கள் நடந்துகொள்வது சினிமாவில் சகஜம்தான்.

ஆனால் இது ரொம்ப ஓவர் என்று சொல்லும் அளவுக்கு நடந்து கொண்ட நடிகருக்கு ஆண்டவனே தண்டனை கொடுத்துட்டான் என சொல்லும் அளவுக்கு ஆகவிட்டது.

மலையாளத்தில் சமீபத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படம் அதிரிபுதிரு ஹிட் ஆனது. படம் 100 கோடிக்கு மேல் வசூல் மழை பொழிந்தது. மலையாளம் மட்டுமல்லாமல், தமிழ் ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்தது.

இதில் நடித்த நடிகர் ஸ்ரீநாத் பாசி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் ஏற்கனவே கேரளாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போதை விருந்தில் பங்கேற்று சர்ச்சையில் க்கினார்.

Sreenath Bhasi

பின்னர் இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் இன்னொரு வழக்கில் சிக்கினார். இவர் காரில் சென்ற போது அவருடைய கார் மோதி பைக்கில் சென்ற வாகன ஓட்டி படுகாயமடைந்தார்.

ஆனால் அந்த இடத்தில் இருந்து உடனே காரை நிறுத்தாமல் ஸ்ரீநாத் சென்றுவிட்டார். இது குறித்து எர்ணாகுளம் போலுசா வாக்குப்பதிவு செய்து, ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுநர் உரிமத்தை ஒரு மாத காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

  • Bigg Boss Tamil Season 8 updates பிக் பாஸ் வீட்டுக்கு படையெடுத்த பிரபல நடிகர்…உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தல்..!
  • Views: - 286

    0

    0