ராயனுக்கு முன்பே ஷாக் ஆன சுந்தீப் கிஷன்.. இவ்வளவு நேரமா ஜேசன் சஞ்சய்?

Author: Hariharasudhan
30 November 2024, 1:26 pm

ராயனுக்கு முன்பே படத்தின் கதையை தன்னிடம் ஜேசன் சஞ்சய் கூறியதாக நடிகர் சுந்தீப் கிஷன் கூறியுள்ளார்.

சென்னை: தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக உள்ளவர் விஜய். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகிறார். அதேநேரம், தனது தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியையும் அவர் நிர்வகித்து வருகிறார். இவரது மகன் ஜேசன் சஞ்சய்.

ஏற்கனவே, விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ எனும் படத்தில் ‘நான் அடிச்சா தாங்கமாட்ட’ என்னும் பாடலில் வந்து ரசிகர்களின் கைத்தட்டலை சுட்டியாக பெற்றார். இந்த நிலையில், தற்போது சினிமா தொடர்பாக வெளிநாட்டில் சென்று படித்து வந்த ஜேசன் சஞ்சய், தனது முதல் திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இதன்படி, லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சுந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். தமன் இசை அமைக்கும் இப்படத்திற்கு பிரவீன் கேஎல் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். முதல் படத்திலேயே பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து உள்ள நிலையில், சுந்தீப் கிஷனை தேர்வு செய்தது திரைக்கதையின் தேவை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Sundeep Kishan about Jason Sanjay  01 movie

இந்த நிலையில், இந்தப் படம் குறித்து நேர்காணல் ஒன்றில் நடிகர் சுந்தீப் கிஷன் பேசி உள்ளார். அதில் அவர், “’ராயன் படம் வெளியாவதற்கு முன்பே நாங்கள் இருவரும் சந்தித்து ஒன்றாக பணிபுரிய முடிவு செய்தோம். நான் சந்தித்த ஒரு இனிமையான மற்றும் கடின உழைப்புமிக்க நபர்களில் ஜேசன் சஞ்சயும் ஒருவர்.

இப்படத்தில் பணிபுரிய நான் ஆர்வத்துடன் உள்ளேன். ஒர் பக்கா ஆக்சன் எண்டர்டடெய்னர் படமாக இது இருக்கும். அவர் இந்த கதைக்காக கடுமையாக உழைத்துள்ளார். சுமார் 2 மணி நேரம் 50 நிமிடம் இந்தக் கதையை இடைவெளி இல்லாமல் என்னிடம் கூறினார்.

இதையும் படிங்க: “விடாமுயற்சி” வைரலாகும் அனிருத் பதிவு..பொங்கலுக்கு சம்பவம் உறுதி…!

நான் அதனைக் கேட்டு அசந்துவிட்டேன், இப்படம் கண்டிப்பாக ஒரு பான் இந்தியா (Pan India) படமாக அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படும். அவரின் முதல் படத்தில் நான் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும்” எனக் கூறியுள்ளார்.

  • Good News for Vijay And Trisha விஜய் – திரிஷா குறித்து விரைவில் குட் நியூஸ்.. பற்ற வைத்த பிரபலம்!
  • Views: - 117

    0

    0