தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்து அறிக்கை வெளியிட்ட பிறகு பெரும் பரபரப்பாக கோலிவுட்டில் இது குறித்து பேசப்பட்டு வரும் நிலையில் நடிகை திரிஷா சில தினங்களுக்கு முன்னர் திருமணம் குறித்தும் விவாகரத்து குறித்தும் பேசிய விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் எனக்கு கல்யாணம் நடந்த பிறகு விவாகரத்து வாங்குவதில் நம்பிக்கையே இல்லை நான் சரியான நபரை சந்திக்கும் வரை கல்யாணம் செய்து கொள்ளவே மாட்டேன். அதற்காக கடைசி வரை நான் காத்திருக்கவும் தயாராக இருக்கிறேன்.
இதையும் படியுங்கள்: சரக்கு பெண்களுடன் சகவாசம்…. சந்தேக புத்தி…. ஜெயம் ரவியை தூண்டிவிட்டது யார்?
எனக்கு திருமணம் நடைபெறாமல் இருந்தால் கூட பரவாயில்லை அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். ஆனால், எத்தனையோ பேர் தவறான மனிதர்களை திருமணம் செய்து கொண்ட பிறகு குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்காக அந்த பந்தத்தில் இருக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
எனவே நான் சரியான நபர் வரும் வரை நிச்சயம் காத்திருப்பேன் என திரிஷா பேசியிருந்தார். இந்த விஷயம் தற்போது ஜெயம் ரவியின் விவாகரத்துக்கு பிறகு சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
0
0