லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்னதாக மலையாளத்தை சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.
முன்னதாக இவர் கேரள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கினார் அதன் பிறகு நடிகையாக இன்று முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, தமிழ் , மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நயன்தாரா ஹிந்தியில் பிரபல நடிகரான ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.
இதையும் படியுங்கள்:உயிர் – உலக் உடன் ஜாலி ட்ரிப் அடித்த நயன்தாரா – லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு குவியும் லைக்ஸ்!
தற்ப்போது நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக லயன் , மூக்குத்தி அம்மன்2 , ஊர் குருவி, மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் .
இந்நிலையில் நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை வெளிநாட்டில் சென்று கொண்டாடி இருக்கிறார். அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு, “Happy Birthday My Everything” என கேப்ஷன் கொடுத்துள்ளார். ரசிகர்கள் இந்த அழகான ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
0
0