வாக்களித்தார் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் : கோவையில் திமுக – பாஜகவினரிடையே வாக்குவாதம்..!!

Author: Babu Lakshmanan
19 February 2022, 10:58 am
Quick Share

கோவை : கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியில் உள்ள சி.எம்.எஸ். பள்ளியில் வானதி சீனிவாசன் வாக்களித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. மக்களும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியில் உள்ள சி.எம்.எஸ். பள்ளியில் வானதி சீனிவாசன் வாக்களித்தார். தொடர்ந்து அவர் வந்த காரில் கட்சிக்கொடி இருந்ததால் வாக்குச்சாவடிக்கு வெளியே இருந்த திமுகவினர் வீடியோ எடுத்தனர்.

இதற்கு வானதி சீனிவாசன் எதுவும் தெரிவிக்காமல் வாக்கு செலுத்திவிட்டு கிளம்பிவிட்டார். அதே சமயத்தில் பாஜக தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் சபரி கிரிஸ் திமுகவினருக்கு எதிர்ப்பு தெரிவித்தார். வீடியோ எடுத்தது தவறு என வாக்குவாதம் செய்தார். இதைத்தொடர்ந்து, திமுகவினர் எங்கள் தொகுதி நாங்கள் வீடியோ எடுப்போம் என பேசினர்.

தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அப்பகுதியில் இருந்து வெளியே அனுப்பினர்.

Views: - 680

0

0