வாய் தவறி வார்த்தை வந்துவிட்டது : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மன்னிப்பு கோரினார் காங்கிரஸ் எம்பி!!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2022, 7:29 pm
Adhir Ranhan - Updatenews360
Quick Share

ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் செளத்ரி மன்னிப்பு கோரினார்.

நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஷ்டிரபதி என்ற வார்த்தைக்கு பதிலாக ராஷ்டிரபட்னி என்ற வார்த்தையை, ஜனாதிபதியை அவமதிக்கிற விதத்தில் பயன்படுத்தினார்.

பாஜக இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி மன்னிப்பு கோரியுள்ளார். வாய் தவறி அத்தகைய வார்த்தைகள் வந்துவிட்டதாகவும் ஆதிர் ரஞ்சன் செளத்ரி தெரிவித்துள்ளார்.

Views: - 496

0

0