நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஆரோக்கியமான பச்சை பயறு குழம்பு!!!

2 December 2020, 1:37 pm
Quick Share

பொதுவாக பயறு வகைகள் என்றாலே அது உடலுக்கு அதிக அளவில்  ஆரோக்கியத்தை தரக்கூடியது. அதிலும் பச்சை பயறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பலத்தை தரும். நோய் எதிர்ப்பு சக்தி முதல் செரிமானம் வரை ஊக்குவிக்கும் பச்சை பயறு குழம்பு எப்படி வைப்பது என இந்த பதிவில் பார்ப்போம். 

தேவையான பொருட்கள்:

பச்சை பயறு- 1 கப்

பூண்டு- 5 பல்

தக்காளி- 1

மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி

வெங்காயம்- 2

தாளிக்க:-

எண்ணெய்- 2 தேக்கரண்டி 

கடுகு- 1/4 தேக்கரண்டி

சீரகம்- 1/4 தேக்கரண்டி

பெருங்காய தூள்- ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை- ஒரு கொத்து

உப்பு- தேவையான அளவு

வெங்காயம்- 1

செய்முறை:

பச்சை பயறு குழம்பு வைப்பது என்றால் முதல் நாள் இரவே பயறை நன்றாக கழுவி ஊற வைத்து கொள்ள வேண்டும். அடுத்த நாள் ஒரு குக்கரில் நாம் ஊற வைத்த பச்சை பயறு, ஒரு தக்காளி, வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நான்கில் இருந்து ஐந்து விசில் வரும் வரை சமைக்கவும். 

குக்கர் பிரஷர் அடங்கியதும் அனைத்து பொருட்களையும் ஒன்றும் பாதியுமாக மசித்து கொள்ளவும். இப்போது ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனோடு ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து கொள்ளலாம். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் மசித்து வைத்துள்ள பருப்பு கலவையை சேர்த்து கிளறவும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் சுண்டி குழம்பு கெட்டியானதும் இறக்கி வைத்து விடலாம். இப்போது  ஆரோக்கியமான பச்சை பயறு குழம்பு சாப்பிட தயாராக உள்ளது.

Views: - 41

0

0