6-மாத குழந்தைக்கு உணவு கொடுப்பதில் குழப்பமா? சிறந்த 6-உணவு ஆலோசனைகள்.!!

6 May 2021, 8:06 pm
Quick Share

அம்மாக்களே… உங்கள் குழந்தை 6 வது மாதத்தை தொடும் போது திட உணவுகளை உட்கொள்ள தயாராகிவிட்டது என்று அர்த்தம்.. 6 மாத குழந்தைக்கு என்னென்ன உணவுகளை கொடுக்க வேண்டும் என்ற விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் எளிதானது.

தேவையான பொருட்கள்:
1 கேரட்
1 இனிப்பு உருளைக்கிழங்கு
1 பீட்ரூட்
3 பீன்ஸ், ஸ்வீட் பட்டாணி, கேரட்
1 ஆப்பிள்
1 வாழைப்பழம்
தேவையான நீர்

செய்முறை

படி 1) ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கேரட்டை தோலுரித்து சேர்க்கவும், தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகவும் மென்மையாகவும் இருக்கும் வரை மூடி சமைக்கவும். குளிர்ந்ததும் அதை ஒரு பிளெண்டருக்கு மாற்றி மென்மையாக அரைத்து கொடுக்கலாம்.

படி 2) ஒரு பாத்திரத்தில் நறுக்கிய இனிப்பு உருளைக்கிழங்கை தோலுரித்து சேர்க்கவும், தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகவும் மென்மையாக இருக்கும் வரை மூடி சமைக்கவும். குளிர்ந்ததும் அதை ஒரு பிளெண்டருக்கு மாற்றி மென்மையாக அரைத்து கொடுக்கலாம்

படி 3) ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பீட்ரூட்டை தோலுரித்து சேர்க்கவும், தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகவும் மென்மையாகவும் இருக்கும் வரை மூடி சமைக்கவும். குளிர்ந்ததும் அதை ஒரு பிளெண்டருக்கு மாற்றி மென்மையாக அரைத்து கொடுக்கலாம்.

படி 4) ஒரு கடாயில் பீன்ஸ், ஸ்வீட் பட்டாணி, கேரட் தேவையான தண்ணீரைச் சேர்த்து, காய்கறிகளும் நன்றாகவும் மென்மையாகவும் இருக்கும் வரை மூடி வைத்து சமைக்கவும். குளிர்ந்ததும் அதை ஒரு பிளெண்டருக்கு மாற்றி மென்மையாக அரைத்து கொடுக்கலாம்.

படி 5) நறுக்கிய ஆப்பிளை ஒரு பாத்திரத்தில் தோலுரித்து சேர்க்கவும், தேவையான தண்ணீர் சேர்த்து மூடி, அவை மென்மையாக இருக்கும் வரை சமைக்கவும். குளிர்ந்ததும் அதை ஒரு பிளெண்டருக்கு மாற்றி மென்மையாக அரைத்து கொடுக்கலாம்.

படி 6) பழுத்த வாழைப்பழங்களை பிசைந்து அல்லது அரைத்து கொடுக்கலாம்.

உங்கள் குழந்தைக்கு சுவையான மற்றும் சத்தான உணவு ரெசிபிகள் வழங்க தயாராக உள்ளன. இதனை நாளொன்றுக்கு 2 முறை கொடுத்து வரலாம்.

Views: - 254

0

0