உங்க வீட்டு குட்டீஸூக்கு பிரெட் வைத்து ஒரு டேஸ்டான ரசமலாய் ரெசிபி!!!

29 January 2021, 12:08 pm
Quick Share

ரசமலாய் என்பது ஒரு வட இந்திய இனிப்பு வகையாகும். இது ஹோலி, தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது உண்ணப்படுகிறது. இது செம டேஸ்டாக இருக்கும். சத்தான இனிப்பு வகையும் கூட. இந்த ரசமலாயை பிரெட் வைத்து வித்தியாசமான முறையில் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

வெள்ளை பிரெட் – 4 துண்டுகள் 

சர்க்கரை – 3/4 கப் உலர்ந்த திராட்சை – 8-10 

பிஸ்தா – 8-10 

ஊற வைத்த பாதாம்- 8-10 முந்திரி பருப்பு – 8-10 

பால் – 1 லிட்டர்  

குங்குமப்பூ – 1 சிட்டிகை 

செய்முறை:

1. பிரெட்டை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி எடுத்து விடுங்கள். வெள்ளை பகுதி மட்டும் நமக்கு போதும். அனைத்து ரொட்டி துண்டுகளுக்கும் இவ்வாறு  செய்யவும். 

2. ஒரு கடாயை எடுத்து பாலை கொதிக்க வைக்கவும். 

3. பால் பாதியாக குறையும் வரை அதனை கிளறி விட்டு கொண்டே காத்திருங்கள். அடி பிடித்து விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை, குங்குமப்பூ, நொறுக்கப்பட்ட முந்திரி, திராட்சை மற்றும் பாதாம் பருப்பை சேர்க்கவும். உலர்ந்த பழங்களில் சிறிதளவை தனியாக எடுத்து வைக்கவும். 

4. பால் கெட்டியாகவும், சற்று மஞ்சள் நிறமாகவும் மாறும் வரை கிளறவும். 

5. வெட்டப்பட்ட ரொட்டி துண்டுகளை ஒரு தட்டில் வைக்கவும்.

6. பால் கலவையை முழுவதையும் எடுத்து ரொட்டி துண்டுகள் மீது 

ஊற்றவும். 

7. உலர்ந்த பழங்களால் அலங்கரிக்கவும். (திராட்சையும், முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தா)

8. இதனை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ  பரிமாறவும். 

Views: - 30

1

0