உங்கள் குழந்தைகளை குஷிப்படுத்த வித்தியாசமான ஸ்நாக்ஸ் ரெசிபி!!!

28 December 2020, 7:10 pm
Quick Share

கொரோனா காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருவதால் இல்லத்தரசிகளுக்கு வேலை அதிகமாகி விட்டது என கூறலாம். ஏனெனில் மாலை நேரத்தில் காபி, டீயோடு கட்டாயமாக ஒரு ஸ்நாக்ஸ் செய்தே ஆக வேண்டும். அதிலும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் சொல்லவே வேண்டாம். இன்று நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பார்க்க ஒரு அருமையான ஸ்நாக்ஸ் ரெசிபியை தான் நாம் பார்க்க போகிறோம். 

தேவையான பொருட்கள்:

மைதா – 2 கப் 

ரவை – 1/2 கப் தூள் சர்க்கரை – ½ கப்  வெண்ணெய் அல்லது நெய்- 1/3 கப் 

தேங்காய் பால் – 1/2 கப் பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை 

உப்பு – ஒரு சிட்டிகை வறுக்க தேவையான அளவு  எண்ணெய் 

செய்முறை: 

* உலர்ந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டவும். கொஞ்சம் கொஞ்சமாக  வெண்ணெய் அல்லது நெய்யுடன் கலந்து பிசைந்து கொள்ளவும். 

* இப்போது தேங்காய் பால் ஊற்றவும். ஒரேடியாக ஊற்றி விட வேண்டாம். மாவு ரொம்ப கெட்டியாகவும், ரொம்ப தண்ணியாகவும் இல்லாமல் நடுத்தர பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். தேங்காய் பாலை பயன்படுத்த விரும்பவில்லை என்றால், நீங்கள் சிறிது தண்ணீரைப் பயன்படுத்தலாம். 

* மாவை ஈரமான துணியால் மூடி அரை மணி நேரம் வைக்கவும். 

* மாவை கொஞ்சமாக எடுத்து பட்டாணி அளவிலான பந்துகளாக உருட்டவும். 

* பந்தை உருட்டிய பின் அதனை ஃபோர்க் ஸ்பூன் மீது வைத்து தட்டி பிறகு சுருட்டுங்கள். அனைத்து மாவையும் இவ்வாறு செய்து வைத்து கொள்ளுங்கள்.   

* இப்போது எண்ணெயை சூடாக்கவும். சுருட்டி வைத்த மாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். 

* இதனை மிதமான  வெப்பத்தில் வறுக்கவும், அவை பொன்னிறமாக இருக்கும் போது எடுத்து விடுங்கள். 

* இவை சூடாக இருக்கும் போதே மேலே  சர்க்கரை தூளை போடவும். 

* ஆறியதும், அவற்றை காற்று புகாத டப்பாவில்  சேமிக்கலாம். நீங்கள் சில கூடுதல் சுவையை விரும்பினால், ஒரு துளி வெண்ணிலா எசென்ஸ் அல்லது சிறிது  ஏலக்காய் தூள் சேர்த்து மாவை பிசையலாம். அவ்வளவு தான்… ருசியான ஸ்நாக்ஸ் தயார்.

Views: - 0 View

0

0