இதுவரை நீங்கள் டிரை பண்ணி பார்க்காத வித்தியாசமான ஸ்னாக்ஸ் ரெசிபி!!

26 November 2020, 10:10 am
Quick Share

இன்று நாம் ஒரு வித்தியாசமான வட இந்திய உணவு வகையின் செய்முறையான தோக்லா எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். குஜராத் மாநிலத்தின் ஸ்பெஷலான இந்த தோக்லா சுவையானதாகவும், அதே சமயம் ஆரோக்கியம் மிகுந்ததாகவும் அமைகிறது. இதனை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

கடலை மாவு- 1 1/2 கப்

ரவை- 3 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது- 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய்- 2

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

பெருங்காய பொடி- ஒரு சிட்டிகை

உப்பு- 1/2 தேக்கரண்டி

சர்க்கரை- ஒரு தேக்கரண்டி

எலுமிச்சை சாறு- 1 தேக்கரண்டி

எண்ணெய்- 1 தேக்கரண்டி

பேக்கிங் சோடா- 1/2 தேக்கரண்டி

தண்ணீர்- 1.25 கப்

தாளிக்க:

எண்ணெய்- 2 தேக்கரண்டி

கடுகு- 1/2 தேக்கரண்டி 

சீரகம்- 1 தேக்கரண்டி

வெள்ளை எள்ளு- 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய்- 1

பெருங்காய பொடி- 1 சிட்டிகை

துருவிய தேங்காய்- 1 கப்

கொத்தமல்லி தழை- சிறிதளவு

செய்முறை:

தோக்லா செய்வதற்கு முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் ரவை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும். இதனோடு இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காய தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, பேக்கிங் சோடா, எண்ணெய், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். 

பொருட்கள் அனைத்தும் ஒன்றாக கலந்த பிறகு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவு சிறிது நேரம் ஊறட்டும். இந்த மாவை ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் தடவி ஊற்றி கொள்ளுங்கள். இதனை அடுப்பில் வைத்து இருபது நிமிடங்கள் வேக வைத்து கொள்ளுங்கள். 

மாவு வெந்ததும் அதனை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும். இதனை சதுர வடிவில் வெட்டி கொள்ளுங்கள். இப்போது ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காய தூள், கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். தாளித்த பொருட்களை தோக்லா மீது பரவலாக தூவவும். கடைசியில் துருவிய தேங்காயை சேர்த்து பரிமாற வேண்டியது தான்.

Views: - 0

0

0