குழந்தைகளை வெண்டைக்காய் சாப்பிட வைக்க ஒரு புதுவித ரெசிபி!!!

27 January 2021, 6:13 pm
Quick Share

இன்று நாம் வெண்டைக்காயை வைத்து ஒரு புதுவித ரெசிபி செய்யப் போகிறோம். வெண்டைக்காய் உடலுக்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் குழந்தைகள் இதனை லேசாக சாப்பிட மாட்டார்கள். எனவே அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் தான் அவர்களை சாப்பிட வைக்க முடியும். இப்போது குழந்தைகளுக்கு விருப்பமான ஸ்டஃப்டு வெண்டைக்காய் ரெசிபி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய்- 1/4 கிலோ

தேங்காய் எண்ணெய்- 4 தேக்கரண்டி

பெரிய வெங்காயம்- 2

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி

மாங்காய் தூள்- 1 1/2 தேக்கரண்டி

தனியா தூள்- ஒரு தேக்கரண்டி

துருவிய தேங்காய்- 1/2 கப்

கொத்தமல்லி தழை- சிறிதளவு

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

*ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெயை சூடாக்கவும். 

*எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். 

*பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மாங்காய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். 

*அடுத்து துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து இரண்டு நிமிடங்கள் மட்டும் வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.

*இப்போது வெண்டைக்காயின் காம்புகளை நீக்கி, நாம் தயார் செய்து வைத்த மசாலாவை ஸ்டஃப் செய்யவும். 

*கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றவும். 

*இதில் வெண்டைக்காயை எண்ணெயில் போட்டு மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் சமைக்கவும். 

*ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி போட்டு மேலும் பத்து நிமிடங்கள் வேக விடவும்.

*இப்போது சுவையான ஸ்டஃப்டு வெண்டைக்காய் தயார்.

Views: - 0

0

0